கர்ப்பம் தரித்தலை பிற்போடுவதானது அவர்களது நலனுக்கே, அரசாங்கத்தின் நன்மைக்காக அல்ல - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் - News View

Breaking

Thursday, September 9, 2021

கர்ப்பம் தரித்தலை பிற்போடுவதானது அவர்களது நலனுக்கே, அரசாங்கத்தின் நன்மைக்காக அல்ல - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சிக்கலான நிலைமைக்கு மத்தியில் கர்ப்பிணிகள் எதிர்கொள்ள நேரிடும் அபாயத்தின் காரணமாக கர்ப்பம் தரித்தலை பிற்போடுவதானது அவர்களது நலனுக்கு சிறந்ததாகும். அவ்வாறின்றி இது அரசாங்கத்தின் நன்மைக்காக விடுக்கப்படும் கோரிக்கை அல்ல என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெடர்ந்து தெரிவிக்கையில் அவர், விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகளை மக்களுக்கு தெளிவுபடுத்துவதே எமது இலக்காகும். எவ்வாறிருப்பினும் விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகளை அத்தியாவசிய காரணியாக எம்மால் பிரகடனப்படுத்த முடியாது. ஆனால் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கேனும் பிற்போட வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை நியாயமானதாகும்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சிக்கலான நிலைமைக்கு மத்தியில் கர்ப்பிணிகள் எதிர்கொள்ள நேரிடும் அபாயத்தின் காரணமாக கர்ப்பம் தரித்தலை பிற்போடுவதானது அவர்களது நலனுக்கு சிறந்ததாகும். அவ்வாறின்றி இது அரசாங்கத்தின் நன்மைக்காக விடுக்கப்படும் கோரிக்கை அல்ல.

எனினும் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்தினுடையதாகும். இதற்காக யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்பட மாட்டாது. தீரமானத்தை எடுப்பதற்கான உதவிகள் மாத்திரமே விசேட வைத்திய நிபுணர்களால் வழங்கப்படும்.

No comments:

Post a Comment