50 வகைப் புற்றுநோய்களை கண்டறிய இரத்த சோதனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

50 வகைப் புற்றுநோய்களை கண்டறிய இரத்த சோதனை

பிரிட்டனில் 50 வகைப் புற்றுநோய்களைக் கண்டறியும் இரத்தச் சோதனைக்கான ஆய்வு நடத்தப்படுகிறது.

ஒருவரிடம் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படும் முன்னரே அந்தப் பரிசோதனை மூலம் அதனை அடையாளம் காணமுடியும் எனக் கூறப்படுகிறது.

கிரைல் நிறுவனத்தின் கல்லெரி இரத்தப் பரிசோதனை ஆய்வு, உலகில் இதுவரை இல்லாத அளவில் விரிவானதெனக் கூறப்படுகிறது.

இங்கிலாந்திலுள்ள 140,000 க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களை அதில் சேர்த்துக் கொள்ள பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவை திட்டமிட்டுள்ளது. அவர்களில் பாதிப்பேரின் இரத்தம், உடனடியாக கல்லெரி பரிசோதனை மூலம் சோதிக்கப்படும்.

அந்த வகைப் பரிசோதனையின் மூலம், புற்றுநோயை இறுதிக் கட்டங்களில் கண்டுபிடிப்பதைத் தவிர்க்கலாமா என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்தப்படுவதாக கிங் கொலேஜ் லண்டனின் புற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் பேராசிரியர் குறிப்பிட்டார்.

ஆய்வுக்காக கிரைல் நிறுவனம் 7.1 பில்லியன் டொலர் தொகையைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment