இணையத்தளம் ஊடாக மசாஜ் நிலையம் எனும் பெயரில் விபச்சாரம் : 4 பெண்கள் கைது : சேவையைப் பெற வந்த ஆடவரும் சிக்கினார் - News View

Breaking

Friday, September 10, 2021

இணையத்தளம் ஊடாக மசாஜ் நிலையம் எனும் பெயரில் விபச்சாரம் : 4 பெண்கள் கைது : சேவையைப் பெற வந்த ஆடவரும் சிக்கினார்

(எம்.எப்.எம்.பஸீர்)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி, இணையத்தின் ஊடாக விளம்பரப்படுத்தி மசாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்கிய விபச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டு ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாரச்சந்தைக்கு அருகில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பெண்கள் மற்றும் அங்கு பெண் ஒருவரின் சேவையைப் பெற்றுக் கொள்ள வந்திருந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

கொட்டாவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் 30 - 37 வயதுக்கு இடைப்பட்ட மத்துகம, பலாங்கொடை, பாதுக்கை, பெலிவுல்ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

சுற்றிவளைப்பின் போது, குறித்த விடுதியின் முகாமையாளர் எனக் கூறப்படும் பெண், கட்டிடத்தின் பின்னால் உள்ள ஒரு பகுதியில் பதுங்கி தப்பிக்க முயன்றுள்ளதுடன், இதன்போது பாலடைந்த அப்பகுதியில் இருந்துள்ள எலிகள் அவரை கடித்ததால் சத்தமிட்டு வெளியே ஓடி வந்த போது பொலிஸாரிடம் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கொட்டாவ பொலிஸர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொட்டாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதன பொலிஸ் பரிசோதகர் சுபாஷன வன்னி ஆரச்சியின் ஆலோசனைக்கு அமைய, ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சத்துரங்க உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad