இலங்கை விமானப்படையின் 4 குத்துச் சண்டை வீராங்கனைகள் சர்வதேச போட்டிக்கு தகுதி - நாளை ரஷ்யா பயணம் - News View

Breaking

Wednesday, September 15, 2021

இலங்கை விமானப்படையின் 4 குத்துச் சண்டை வீராங்கனைகள் சர்வதேச போட்டிக்கு தகுதி - நாளை ரஷ்யா பயணம்

58ஆவது சர்வதேச இராணுவ விளையாட்டு போட்டித் தொடரில் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு இலங்கை விமானப்படை வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை சர்வதேச குத்துச் சண்டை நடுவர்களில் ஒருவரான இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ஸ்கொற்றன் லீடர் பிரசாத் விஜேசிங்கவுடன் குறித்த வீராங்கனை நால்வரும் ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு நாளை (16) புறப்படவுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரண தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த போட்டிகளில் பங்குபெற உள்ள விமானப்படை சிரேஷ்ட படை வீராங்கனை சமோதி பஸ்யால 57 கிலோ பிரிவில் 2019 லேடன் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், 2019 தேசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப், 2019 மற்றும் 2018 ஆண்டுக்கான குத்துச்சண்டை போட்டிகளிலும் வெற்றியாளர் ஆவார்.

மேலும் 60 கிலோ குத்துச் சண்டை போட்டிப்பிரிவில் விமானப்படை சிரேஷ்ட படைவீராங்கனை சஜீவனி கூரே பாதுகாப்பு சேவைகள் குத்துச் சண்டை போட்டி 2018 மற்றும் 2019 தாய்லாந்தில் இடம்பெற்ற திறந்த குத்துச் சண்டை போட்டிகளிலும் 2019 ஆசிய குத்துச் சண்டை போட்டிகளும் வெற்றிபெற்றவராவார்.

விமானப்படை சிரேஷ்ட படைவீராங்கனை கஸ்மி திவங்கா 69 கிலோ குத்துச் சண்டை பிரிவில் பாதுகாப்பு சேவைகள் குத்துச் சண்டை போட்டி 2018ஆம் ஆண்டுக்கான லேடன் கோப்பை குத்துச் சண்டை 2019ஆம் ஆண்டுக்கான கிளிபேட் கிண்ண குத்துச் சண்டை போட்டிகள் 2018 மற்றும் 2019 ஆண்டுக்கான தேசிய குத்துச் சண்டை போட்டிகளிலும் பங்குபெற்று வெற்றியாளரானதோடு, விமானப்படை சிரேஷ்ட படைவீராங்கனையான கயனி கலுஆரச்சி 75 கிலோ பிரிவில் பாதுகாப்பு சேவைகள் குத்துச் சண்டை போட்டி 2018ஆம் ஆண்டுக்கான லேடன் கோப்பை குத்துச் சண்டை, 2019ஆம் ஆண்டுக்கான கிளிபேட் கிண்ண குத்துசண்டை ஆகிய போட்டிகளில் வெற்றியாளராவார்.

இந்நான்கு வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அனுபவங்களுடன் இந்த போட்டித்தொடரில் பங்குபற்றவுள்ளனர்

விமானப்படை குத்துச் சண்டை பிரிவின் தலைவராக குரூப் கேப்டன் இந்திக விக்ரமசிங்கவும் செயலாளராக விங் கமாண்டர் விராஜ் கமகேவும் , பிரதான பயிற்சியாலாளராக சிரேஷ்ட வான்படை வீரர் தனுஷ்க ஆரியரத்னவும் செயற்படுகின்றனர்.

No comments:

Post a Comment