யாழில் பிறந்த நாள் கொண்டாடிய 35 இளைஞர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

யாழில் பிறந்த நாள் கொண்டாடிய 35 இளைஞர்கள் கைது

யாழ். திருநெல்வேலி தனியார் ஹொட்டல் ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 35 இளைஞர்களை நேற்றிரவு (19) 08.30 மணியளவில் கைது செய்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்ட நிலையில் பொது நிகழ்வுகள், பிறந்தநாள், திருமண வைபவங்கள் என்பன சுகாதார தரப்பினால் நிறுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் மக்கள் வழங்கிய தகவலை அடுத்து விடுதிக்கு சென்ற யாழ்ப்பாண பொலிஸார் அங்கிருந்தவர்களை கைது செய்துள்ளனர்.

35 இளைஞர்களுக்கும் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ். நிருபர் ரமணன்

No comments:

Post a Comment