இலங்கைக்கு கடத்திய ஆயிரத்து 500 கிலோ கடல் அட்டைகள் படகுடன் பறிமுதல் - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

இலங்கைக்கு கடத்திய ஆயிரத்து 500 கிலோ கடல் அட்டைகள் படகுடன் பறிமுதல்

‘மனோலி’ தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய ஆயிரத்து 500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப் படகை இந்திய கடலோரக் காவல் படை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்திய கடலோரக் காவல் படை, மன்னார் வளைகுடா கடல் பகுதியில், ஹோவர் கிராப்ட் மூலம் கூட்டு ரோந்து சென்றனர்.

இதன்போது, மனோலி தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நாட்டுப்படகை கைப்பற்ற கடலில் முயன்றனர்.

அதாவது, ஹோவர் கிராப்ட் விரைந்து வருவதை அறிந்த நாட்டுப் படகில் இருந்த 4 பேர், தப்பி ஓடியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பதிவெண் இல்லா நாட்டுப்படகில் இருந்த கடல் அட்டை மூட்டைகளை மண்டபம் இந்திய கடலோரக் காவல் படை, முகாமுக்கு கொண்டு வந்தனர்.

அப்போது, மூட்டைகளை பார்த்தபோது அதில் பதப்படுத்தப்படாத பச்சை கடல் அட்டைகள் ஆயிரத்து 500 கிலோ இருந்துள்ளன. அதனை மண்டபம் வனத்துறையினரிடம் படையினர் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment