உலகில் முதல் நாடாக கியூபாவில் 2 வயதுக் குழந்தைக்கும் கொவிட் தடுப்பூசி - News View

Breaking

Wednesday, September 8, 2021

உலகில் முதல் நாடாக கியூபாவில் 2 வயதுக் குழந்தைக்கும் கொவிட் தடுப்பூசி

உலக அளவில் முதல்முறையாக, கியூபாவில் 2 வயது குழந்தைகளுக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து அதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

அந்த தடுப்பு மருந்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. கியூபாவில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன், கியூபா, பிள்ளைகள் அனைவருக்கும் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிள்ளைகளுக்கான தடுப்பூசித் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை முதல் 2 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள், தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகளும், பிள்ளைகளுக்கான தடுப்பூசித் திட்டம் குறித்து அறிவித்துள்ளன.

கியூபாவில் அண்மைய மாதங்களில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் அந்நாட்டு சுகாதார கட்டமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நோய்த் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் அங்கு 5,700 பேர் வரை உயிரிழந்திருப்பதோடு இதில் பாதி அளவான உயிரிழப்பு மற்றும் மொத்த நோய்த் தொற்று சம்பவங்களில் மூன்றில் ஒரு பங்கு கடந்த மாதத்தில் மாத்திரம் பதிவானது.

No comments:

Post a Comment