முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்திற்குட்பட்ட வடகாடு கொல்லவிளாங்குளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (20) காலை மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலம் இனம் காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கணவனை பிரிந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் ஆடைத் தொழில்சாலையில் பணியாற்றி வரும் 32 அகவையுடைய பிரதீபன் புஷ்பராணி எனும் இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் PCR முடிவுகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மல்லாவி பொலிசார் தெரிவித்தனர்.
(சண்முகம் தவசீலன்)
No comments:
Post a Comment