தந்தைக்கான ரவை 14 வயது மகனின் உயிரை பறித்தது : மூவர் கைது, பிரதான சந்தேகநபர் தலைமறைவு - News View

Breaking

Monday, September 20, 2021

தந்தைக்கான ரவை 14 வயது மகனின் உயிரை பறித்தது : மூவர் கைது, பிரதான சந்தேகநபர் தலைமறைவு

வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

நேற்று (19) 10.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குறித்த பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அருகருகே வசித்து வந்த குடும்ப சொந்தக்காரர்களுக்கிடையே தனிப்பட்ட தகராறின் போது, உயிரிழந்த சிறுவனின் தந்தையை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எதிர்பாராத வகையில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதாக, நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

வீரகெட்டிய, கஜநாயக்க கம பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் பல்வேறு பொலிஸ் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, வீரகெட்டிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment