மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படா விட்டால் நாட்டை முடக்கினாலும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது - சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே - News View

Breaking

Friday, August 27, 2021

மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படா விட்டால் நாட்டை முடக்கினாலும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது - சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

(எம்.மனோசித்ரா)

நாட்டை முடக்குவது மாத்திரமே கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு அல்ல. மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படா விட்டால் நாட்டை முடக்கினாலும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. இது வாழ்க்கையுடனான போராட்டமாகும். எனவே சகலரும் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், டெல்டா திரிபானது மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் ஆகும். எனவே மக்கள் ஒவ்வொருவரும் தாமாகவே தம்மை பாதுகாத்துக் கொள்வார்களாயின் இவ்வாறு வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புக்கள் இருக்காது.

அத்தோடு தற்போதும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாதோர் காணப்படுவார்களாயின் அருகிலுள்ள தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

எனவே தடுப்பூசிகள் வகைகளை தேடிக் கொண்டிருக்காமல் அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தற்போது பயன்படுத்தப்படுகின்ற சகல தடுப்பூசிகளும் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற உதவும் என்று மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad