வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே இலத்திரனியல் தடுப்பூசி அட்டை வழங்கப்படும் - News View

Breaking

Friday, August 27, 2021

வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே இலத்திரனியல் தடுப்பூசி அட்டை வழங்கப்படும்

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே இலத்திரனியல் தடுப்பூசி அட்டை வழங்கப்படும். சுகாதார அமைச்சின் இணைதளத்தினூடாக விண்ணப்பிப்பதன் மூலம் 5 - 7 நாட்களுக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் தரவுகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது சாதாரண தடுப்பூசி அட்டைகளே நாட்டில் வழங்கப்படுகின்றன. எனவே வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு அது பாதுகாப்பற்றது என்பதால் இலத்திரனியல் தடுப்பூசி அட்டையை வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்த அட்டையின் ஊடாக எந்த போலியான விடயங்களையும் முன்னெடுக்க முடியாது.

சுகாதார அமைச்சின் இணையதளத்தினூடாக விண்ணப்பிப்பதன் மூலம் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும். கடந்த புதன்கிழமை இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

24 மணித்தியாலங்களுக்குள் இலத்திரனியல் தடுப்பூசி அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு 1000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சரியான தகவல்கள் வழங்கப்பட்டால் மாத்திரமே அதனைப் பெற்றுக் கொள்ள முடியும். வழங்கப்படும் தகவல்கள் உண்மையானவையா என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அது குறித்த மேலதிக தகவல்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment