போற்றுதலும் துாற்றுலும் ! மன உளைச்சலுக்குள்ளாகும் நல்லடக்க பணி செய்யும் தியாகிகள்..! - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

போற்றுதலும் துாற்றுலும் ! மன உளைச்சலுக்குள்ளாகும் நல்லடக்க பணி செய்யும் தியாகிகள்..!

நேரில் காணும் பலர் தங்கள் துஆக்களில் இவர்களையும் இணைத்து கையேந்தும் நிலையில், சிலர் இவர்களை வேற்று கிரகவாசிகள் போல் நோக்குவதும் கூழிக்கு மாரடிப்பவர்கள் என்ற பார்வையும் இவர்களை துாரத்தில் கண்டவுடன் முகக்கவசங்ளை இழுத்து விடுவதும் நமது பிரதேசங்களில் காணப்படுவதும் வேதனைக்குறிய விடயமே.

உயிரையும் உடலையும் பொறுப்படுத்தாது இரவு பகல் மழை வெயில் என்றும் பாராது தங்களை அர்ப்பணித்து நல்லடக்கப்பணி செய்யும் இவர்களுக்கும் சராசரி மனிதனைப்போல் பிள்ளை குடும்பம் என எல்லாம் இருக்கின்றதுதான்.

ஆனாலும் சளிக்காமல் கொரோனா ஆடைகள் அதனுடன் மேலதிக பாதுகாப்பு அங்கிகள் இரத்தம் வியர்வையாக உள்ளாடைகளை நனைக்க மணிக்கணக்காக அடக்க தள இடத்தை 5 கிலோ மீற்றர்களுக்கு மேல் வலம் வந்த இப்பணியில் தினமும் 40 - 50 என உடல்களை கன்டினர்கள், அம்புலன்ஸ் வண்டிகளில் இருந்து இறக்கி நல்லடக்கம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்று வரை ஓட்டமாவடி, மஜ்மா நகரில்  2378 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டாலும் நல்ல உள்ளங்களின் துஆக்களின் மூலம் அல்லாஹ்வின் அருளால் எந்த உடல் உபாதைகைளும் யாருக்கும் ஏற்படவில்லை தொடர்ந்தும் அல்லாஹ் பாதுகாப்பானாக (ஆமீன்)

இங்கு இவர்கள் யாரும் கூழிக்காக இப்பணிக்கு இணையவில்லை ஜனாஷா நல்லடக்க பணிக்கு கொரோனா தொற்று உயிர் பயம் இதனால் யாரும் முன்வராத நிலையில் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே எதையும் எதிர்பார்க்காது சமுகப் பணியாக செய்கின்றனர்.

கொரோனா மரணங்கள் அதிகரித்து வந்ததால் இப்பணியை தொடர வேண்டிய சந்தர்ப்பமும் உருவானதால் இப்பணியில் அனுபவப்பட்ட இவர்களின் பணி தொடர்ந்து தேவையாக இருந்ததினால் இதுவரை சிறப்பாக இப்பணியை தேஷியம் எங்கும் இருந்து மஜ்மா நகருக்கு கொண்டுவரப்படும் கொவிட் தொற்று உடல்களை ஒட்டமாவடி பிரதேச சபை சுகாதாரத்துறை பாதுகாப்புத்துறை மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் தங்கள் உறவுகள் போல் பக்குவமாக நல்லடக்கம் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கும் வாய் வயிறு குடும்பம் என தேவையிருக்கின்றது என சில நல்ல உள்ளங்களின் முயற்சியால் இவர்களுக்காக வழங்கப்படும் ஊக்குவிப்பு அன்பளிப்பை சிலர் வேறு கண்ணோட்டத்தில் நோக்குவதும் புரியவில்லை.

அவர்களின் புரிதல் ஏற்றுக் கொள்ளக் கூடியதென்றால் உறவினர்கள் கூட நெருங்க பீதி கொள்ளும் ஒரு கொவிட் தொற்றில் மரணித்த உடல்களுடன் சளிக்காமல் சுமந்து சென்று நல்லடக்கம் செய்யப்படும் ஒரு உடலுக்கான சன்மானம் 40000 ரூபாவுக்கும் குறைவான தொகையே கிடைக்கின்றது.

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். பாமரன் முதல் வைத்தியர் படித்தவன் பட்டதாரி பணக்காரன் இளைஞர் பெண்கள் முதியோர் சிறுவர் என 2378 ஜாம்பவான்களை அமைதியாக மஜ்மா மண் அரவணைத்திருக்கும் இத்தருவாயில் அடுத்த நொடி மரணம் நானாகவோ நீங்களாகவே இருக்கலாம்.

இன்னும் நிறைய கள விடயங்கள் நிறையவே உண்டு அதனை நேரில் அனுபவிப்பவர்களுக்கே புரியும் போற்றா விட்டாலும் மன உளைச்சளை உண்டு பன்னும் உங்களது வாய் செயற்பாடுகளை மீண்டுமொருமுறை மீட்டுவது காலத்தின் தேவையாகும்.

அல்லாஹ் நம் எல்லோரையும் இந்த கொடிய வைரஷிடமிருந்து பாதுகாத்து சுகமான ஆரோக்கியத்தை அருள்வானாக, மேலும் மஜ்மாவில் அடக்கப்பட்டிருக்கும் ஈமானிய ஆத்மாக்களில் பாவங்களை மன்னித்து அவர்களின் கபுருடைய வாழ்க்கையை சுகமானதாக ஆக்கி பொருந்திக் கொள்வானாக (ஆமீன் யாறப்பல் ஆலமீன்)

போற்றுவதா துாற்றுவதா முடிவு உங்களிடம் (நன்றி) 
எம் ஜிப்றி கலந்தர் ஜே.பி 
நல்லடக்க கள பணியாளர்

No comments:

Post a Comment