நாட்டை முழுமையாக மூடுவதில்லை என்ற தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் நாட்டில் பயணத் தடையை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாட்டை முழுமையாக மூடினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் அத்துடன் அன்றாடம் தமது ஜீவனோபாய தொழிலை மேற்கொள்பவர்கள் பெரும் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள நேரும் என்பதையும் அவர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார். அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment