மங்கள சமரவீர குறித்து பொய்ப்பிரசாரம் : நளின் பண்டார எம்.பி மறுப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 18, 2021

மங்கள சமரவீர குறித்து பொய்ப்பிரசாரம் : நளின் பண்டார எம்.பி மறுப்பு

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நேற்று தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்குள்ளான மங்கள சமரவீர, தற்போது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில், மங்கள சமரவீர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளன.

இவ்வாறு பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

எவ்வாறாயினும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மங்கள சமரவீரவின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அவர் சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment