சரித்திரப் பிரசித்தி பெற்ற கண்டி எசல பெரஹராவில் புனித தந்தத்தை சுமந்து செல்லும் கொம்பன் யானையான நெதுன்கமுவே ராஜா வரகாபொல பிதேசத்திலிருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கால் நடையாக கண்டியை நோக்கி நேற்று (8.8.2021) அழைத்துச் செல்லப்பட்டது.
மேற்படி கொம்பன் யானைக்கு தற்போது 67 வயதாகும். பாதுகாப்பின் நிமித்தமே கால்நடையாக யானை எடுத்துச் செல்லப்படுகிறது.
இது ஒரு நாளைக்கு சுமார் 10 கிலோ மீற்றர் வரை கால்நடையாக எடுத்துச் செல்லப்படுகிறது.
வரகாபொல பிதேசத்திலிருந்து கண்டியை வந்தடைய 6 நாட்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கும்பல் பெரஹரா வெளி வீதி வலம் வரும்.
No comments:
Post a Comment