மதன மோதகம் என அழைக்கப்படும் கஞ்சா கலந்த 21 கிலோ கிராம் போதைப் பொருள், 800 போதை மாத்திரைகள், 800 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படையின் திட்டமிடப்பட்ட குற்றப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (08) பிற்பகல் 7.00 மணியளவில், மாராவில பகுதியில் உள்ள சாந்தி லேன் பகுதியில் குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இதில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், சாந்தி லேன், மாரவிலாவில் வசிக்கும் 44 வயதான குறித்த சந்தேகநபரை இன்றையதினம் (09) மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment