அமைச்சரவை தீர்மானத்தை தாம் ஏற்றுக் கொள்ள போவதில்லை - ஜோசப் ஸ்டாலின் - News View

Breaking

Tuesday, August 31, 2021

அமைச்சரவை தீர்மானத்தை தாம் ஏற்றுக் கொள்ள போவதில்லை - ஜோசப் ஸ்டாலின்

அமைச்சரவை முன்மொழிந்த 5000 ரூபாய் இடைக்கால கொடுப்பனவை தாம் ஏற்றுக் கொள்ள போவதில்லை எனவும் தமது கோரிக்கையான சுபோதினி பரிந்துரையை வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலேயே நிரந்தரத் தீர்வு வழங்கப்படுமெனவும் அதுவரையில் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசு தீர்மானித்திருப்பது எம்மை ஏமாற்றும் செயல்.

இது ஒரு பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. எனவே நாம் அமைச்சரவையின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள போவதில்லை. இதனை முழுமையாக நிராகரிக்கின்றோம். எமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment