நாட்டை தொடர்ந்தும் முடக்கினால் அதன் விளைவை ஒட்டு மொத்த மக்களும் எதிர்கொள்ள நேரிடும் : கொழும்பில் பொதுமக்கள் செயற்படும் விதம் அதிருப்தியளிக்கிறது - சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Saturday, August 28, 2021

நாட்டை தொடர்ந்தும் முடக்கினால் அதன் விளைவை ஒட்டு மொத்த மக்களும் எதிர்கொள்ள நேரிடும் : கொழும்பில் பொதுமக்கள் செயற்படும் விதம் அதிருப்தியளிக்கிறது - சுசில் பிரேமஜயந்த

இராஜதுரை ஹஷான்

நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு நாட்டை தொடர்ந்தும் முடக்கினால் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதன் விளைவை ஒட்டு மொத்த மக்களும் எதிர்கொள்ள நேரிடும் என தொலை நோக்கு கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக கொழும்பில் பொதுமக்கள் செயற்படும் விதம் அதிருப்தியளிக்கிறது.

வீதிகளில் காரணமின்றி நடமாடுவதையும், கூட்டமாக நின்று உரையாடுவதையும் காண முடிந்தது. பாதுகாப்பு தரப்பினரால் இவ்வாறான செயற்பாடுகளை கண்டிக்க முடியாது.

கொவிட் தாக்கத்தினால் இதுவரையில் 27 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மரணித்துள்ளனர். தற்போதைய நெருக்கடியான நிலையில் அனைத்து தரப்பினரும் தங்களின் சுய பாதுகாப்பிற்கே முதலில் முன்னுரிமை வழங்குவார்கள்.

கொவிட் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை. நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியான நிலையை வெற்றி கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment