தடுப்பூசி பெற மறுத்தால் கடும் சட்ட நடவடிக்கை என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 31, 2021

தடுப்பூசி பெற மறுத்தால் கடும் சட்ட நடவடிக்கை என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நாட்டில் தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கொவிட்19 தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது.

டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது. அத்துடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும். அவசரத் தேவை தவிர வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், முகக்கவசம் அணியாதவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது கொவிட்டை கட்டுப்படுத்த முடியாது. எனவே ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment