இஸ்ரேலிய வர்த்தக நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் : தன் மீதான குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கும் சீனா - News View

About Us

About Us

Breaking

Saturday, August 14, 2021

இஸ்ரேலிய வர்த்தக நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் : தன் மீதான குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கும் சீனா

இஸ்ரேலிய அரசு மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள் மீது பாரிய சைபர் தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக ஃபயர் ஐ என்ற சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. 

மேலும் ஈரான், சவூதி அரேபியா மற்றும் வேறு சில நாடுகளின் வர்த்தக நிறுவனங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு முக்கியமான நிறுவனங்களில் சைபர் தாக்குதல் மூலம் உள் நுழைந்து இரகசிய தகவல்களைத் திருடுவதன் மூலம் அந்நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக உள விடயங்களை அறிந்து கொள்வதன் மூலம் உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளையோ மழுங்கடிப்பது இதன் நோக்கமல்ல என்று பயர் ஐ தெரிவித்துள்ளது.

எனினும் இஸ்ரேலின் தேசிய சைபர் பணியகம், இத்தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக இன்னும் உணரப்படவில்லை என்று தெரிவித்திருப்பதோடு சீனாவை அது குறிப்பிட்டுச் சொல்லவும் இல்லை. இஸ்ரேலிய பிரதமர் அலுவலகமும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் சீனா இருப்பதை இஸ்ரேலிய சைபர் ஏஜன்சிகள் ருசுப்படுத்தியிருந்தாலும் தமது நாட்டுடன் இத்தாக்குதலை தொடர்புபடுத்துவதை இஸ்ரேலுக்கான சீன தூதரகம் நிராகரித்துள்ளது.

ஃபயர் ஐ நிறுவனத்தின் தகவலில் உண்மை இல்லை எனவும் அரசியல் எதிர்பார்ப்புகளுடனானது என்றும் தெரிவித்திருக்கும் சீனத் தூதரகம, சைபர் பாதுகாப்பில் சீனா என்றைக்கும் முழுமையான ஈடுபாடு கொண்ட நாடு என்றும் உள்நாட்டிலோ அல்லது அதன் வெளிநாட்டு வலையமைப்பிலோ மேற்கொள்ளப்படும் சைபர் தாக்குதல்களைத் தொடர்ந்தும் எதிர்த்து வந்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

எமது இஸ்ரேலிய நண்பர்களும் ஊடகவியலாளர்களும் இவ்விடயத்தில் எது சரி எது பிழை என்பதை உணர்ந்து வதந்திகளை உலவவிடக் கூடாது என்றும் சீனத்தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் சீனாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டுள்ளது. இஸ்ரேலிய தொழில்துறையில் பல பல்லின டொலர்களை சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. செமி கண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற மூலோபாய திட்டங்களிலும் சீனா முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment