மோட்டார் சைக்கிள், தங்க ஆபரண கொள்ளைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது - News View

Breaking

Friday, August 27, 2021

மோட்டார் சைக்கிள், தங்க ஆபரண கொள்ளைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது

(எம்.மனோசித்ரா)

ஹக்மன பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள் கொள்ளை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை தலங்கம பொலிஸ் பிரிவில் கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு ஹக்மன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 45 வயதுடைய மித்தெனிய மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

குறித்த சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கொடகவெல, பணாமுர, எம்பிலிபிட்டிய, தங்காலை, பெலியத்த, சுரிவௌ, லுணுகம்வெஹர மற்றும் மித்தெனிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற தங்க ஆபரண கொள்ளை, சொத்துக்கள் கொள்ளை மற்றும் மோட்டார் சைக்கிள் கொள்ளை பலவற்றுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment