கொவிட் மரண வீதத்தில் உலக நாடுகளில் இலங்கை முதலிடம் - நளின் பண்டார - News View

About Us

About Us

Breaking

Saturday, August 21, 2021

கொவிட் மரண வீதத்தில் உலக நாடுகளில் இலங்கை முதலிடம் - நளின் பண்டார

எம்.மனோசித்ரா

உலகலாவிய ரீதியில் அவதானிக்கும் போது ஒரு மில்லியன் சனத் தொகைக்கு கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் தொகை இலங்கையில் 9 சதவீதமாகக் காணப்படுகிறது. கொவிட் மரண வீதத்தில் உலக நாடுகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

தற்போது கொவிட் சமூகப் பரவலாக வியாபித்துள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்தோடு உண்மையான தரவுகளை மறைப்பதன் மூலமும், பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் அளவைக் குறைப்பதன் மூலமும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை அரசாங்கம் உணர வேண்டும் என்றும் நளின் பண்டார சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்தார்.

அவர் மேலும் கூறுகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களை மீறி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தில் முன்னுரிமையளிக்காமையே மரணங்கள் அதிகரிக்க பிரதான காரணமாகும்.

உலகலாவிய ரீதியில் அவதானிக்கும் போது ஒரு மில்லியன் சனத் தொகைக்கு கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் தொகை இலங்கையில் 9 சதவீதமாகக் காணப்படுகிறது. கொவிட் மரண வீதத்தில் உலக நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது.

தென் ஆசியாவில் இலங்கையில் மாத்திரமே ஒரு மில்லியன் சனத் தொகைக்கு 9 சதவீதம் மரணம் பதிவாகிறது. ஏனைய நாடுகளில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. கொவிட் பரவல் மூன்றாம் அலையானது மரணத்தின் திசையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த திசையை நாம் அனைவரும் இணைந்து மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment