அபாய நிலையை தடுக்க தடுப்பூசியை போடவும் : பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்கிறார் இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Monday, August 9, 2021

அபாய நிலையை தடுக்க தடுப்பூசியை போடவும் : பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்கிறார் இராணுவத் தளபதி

தடுப்பூசியை செலுத்தி கொவிட்-19 தொற்றினால் ஏற்படும் அபாய நிலையைத் தவிர்க்குமாறு கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாமெனவும் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். விசேடமாக சகல சந்தர்ப்பங்களிலும் முகக் கவசம் அணிதல் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை விரைவு படுத்தியிருக்கிறது. மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தருவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் 75 வீதமானோர் தடுப்பூசியின் ஒரு டோசையாவது செலுத்தியிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment