மூன்று குழந்தைகள் பெற்றெடுக்கும் திட்டம் : சட்டமாக நிறைவேற்றியது சீனா - News View

About Us

About Us

Breaking

Friday, August 20, 2021

மூன்று குழந்தைகள் பெற்றெடுக்கும் திட்டம் : சட்டமாக நிறைவேற்றியது சீனா

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் வரை பெற்றெடுக்கும் திட்டத்தை சீனா சட்டமாக நிறைவேற்றியுள்ளது.

சீனா தனது சட்டங்களை முறையாக திருத்தியுள்ளது. கடந்த மே மாதம் சீனாவில் ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதையும் குழந்தையை வளர்ப்பதற்கான "சுமையை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட பல தீர்மானங்களுடன் அந்த முடிவு தற்போது முறையாக சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த தீர்மானத்தில் "சமூக பராமரிப்பு கட்டணம்" இரத்து செய்வது, வரம்புக்கு அப்பாற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கான நிதி அபராதம், பெற்றோர் விடுமுறை வழங்க உள்ளூர் அரசாங்கங்களை ஊக்குவித்தல், பெண்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை அதிகரித்தல் மற்றும் குழந்தை பராமரிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தல் ஆகியவை அடங்கும்.

இந்நிலையில், முன்னதாக, சீனாவில் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்து வந்த ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் கட்டுப்பாடு கடந்த 2016ஆம் ஆண்டு தளர்த்தப்பட்டு, அந்த எண்ணிக்கை இரண்டாக மாற்றப்பட்டது. ஆனால் இது பிறப்புகளில் தொடர்ச்சியான எழுச்சிக்கு வழிவகுக்கவில்லை. ஏனெனில் நகரங்களில் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவு பல சீன தம்பதிகளைத் தடுத்துள்ளது.

No comments:

Post a Comment