கொவிட் தொற்றுக்குள்ளானார் ஷேன் வோர்ன் - News View

About Us

About Us

Breaking

Monday, August 2, 2021

கொவிட் தொற்றுக்குள்ளானார் ஷேன் வோர்ன்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஷேன் வோர்ன் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகிள்ளார்.

ஷேன் வோர்ன் தற்சமயம் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்து கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார்.

அணியின் நிர்வாகக் குழுவின் மாற்றொரு பெயரிடப்படாத உறுப்பினர் கொரோனா தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்ததையடுத்து, ஷேன் வோர்ன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் தனிமைப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனை முடிவுகளிலேயே அவர் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக தெரியவதுள்ளது.

No comments:

Post a Comment