மாலிஸ்தான் மாவட்டம், முண்டாரக்ட் கிராமத்தில் கடந்த ஜூலை 4 - 6 திகதி வரை நடந்த கொலைகளின் கொடூரமான விவரங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
தலிபான் போராளிகள் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தை கைப்பற்றிய பின்னர் 9 ஹசாரா ஆண்களை படுகொலை செய்ததாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சாட்சியங்களை அழிக்கும் வகையில் அனைத்து கையடக்க மற்றும் புகைப்பட கருவிகளின் பயன்பாட்டை தடுத்துள்ளனர்.
இந்தக் கொலைகளின் ஊடாக கொடூரமான தாலிபானின் கடந்த கால நினைவூட்டுவதாகவும் தாலிபான் ஆட்சியின் எதிர்காலத்தையும் பிரதிப்பளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆயுத மோதலின் பின்னணியில் சித்திரவதை மற்றும் கொலை ஜெனீவா உடன்படிக்கைகளை மீறுகிறது.
மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்தின் கீழ் போர்க் குற்றங்களாகவே தலிபான்களின் இத்தகைய வன்முறைகள் பதிவாகின்றன.
சித்திரவதைகள் மற்றும் கொலைகள் குறித்து நேரில் கண்ட சாட்சிகளுடன் நேர்காணல்களை முன்னெடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, பல புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதராங்களை ஆய்வு செய்து வருகின்றது.
No comments:
Post a Comment