கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை அதிபராக எம்.எஸ். எம். பைசால் ! லீடர் அஸ்ரப் வித்தியாலய அதிபராக எம்.ஐ. சம்சுதீன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 31, 2021

கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை அதிபராக எம்.எஸ். எம். பைசால் ! லீடர் அஸ்ரப் வித்தியாலய அதிபராக எம்.ஐ. சம்சுதீன்

நூருல் ஹுதா உமர்

ஒன்பது வருடங்களாக சாய்ந்தமருது கமு/கமு/ரியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய எம்.ஐ. சம்சுதீன் அவர்கள் அண்மையில் நடைபெற்ற அதிபர் இடமாற்றத்திற்கு அமைவாக கமு/கமு/ லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தின் அதிபராக இடமாற்றம் பெற்றிருந்ததுடன் செவ்வாய்க்கிழமை மாலை தனது கடமையினை பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசாலிடமிருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதே போன்று கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலய அதிபராக கடமையாற்றி கமு/கமு/ லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தின் அதிபராக இடமாற்றம் பெற்றிருந்த பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தனது அதிபர் தரம் ஒன்றுக்கு பொருத்தமான பாடசாலையான கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலைக்கு அதிபராக இடமாற்றலாகி தன்னுடைய அதிபர் பொறுப்புக்களை ஓய்வு பெற்ற அப்பாடசாலை அதிபர் எஸ்.எம். அலிக்கானிடமிருந்து செவ்வாய்க்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த பொறுப்பேற்கும் நிகழ்வுகளில் கொவிட் -19 நிலமையினை கருத்திற் கொண்டு சில ஆசிரியர்களும், பாடசாலையின் அபிவிருத்திச் சபையின் ஒரு சில உறுப்பினர்களும், முக்கிய பிரமுகர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment