ரிஷாத் பதியுதீனின் மாமனாருக்கு கொரோனா : பிணை கோரிக்கை நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

ரிஷாத் பதியுதீனின் மாமனாருக்கு கொரோனா : பிணை கோரிக்கை நிராகரிப்பு

டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீனின் மாமனாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (27) தெரியவந்துள்ளது.

ரிஷாத் பதியூதீனின் மாமனாருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், அவரை பிணையில் விடுவிக்குமாறு, மனுவொன்றின் ஊடாக, அவரது சட்டத்தரணிகள் கொழும்பு மேலதிக நீதவான் லோச்சணி அபேவிக்கிரமவிடம் இன்று கோரியிருந்தனர்.

கொரோனா தொற்றை காரணமாக கொண்டு, சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது எனக் கூறிய நீதவான், பிணை மனுக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

சந்தேகநபர் கொவிட்19 தொற்றுக்குள்ளாகி சுகயீனமுற்றுள்ளமையினால், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமென சட்டத்தரணிகள், மனுவின் ஊடாக கோரியுள்ளனர்.

அத்துடன், அவர் கொவிட்19 முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இரண்டாவது தடுப்பூசியை அவர் பெற்றுக் கொள்ளவில்லையெனவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதனால், சந்தேகநபரின் உயிருக்கு ஆபத்து காணப்படுகின்றமையினால், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமென சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

எனினும், கொரோனாவை காரணம் காட்டி, சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாதென கூறிய நீதவான், சந்தேகநபருக்கு சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment