இரகசியமான முறையில் நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது, கைது செய்தாலும் ஒருபோதும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை - முன்னிலை சோசலிசக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Saturday, August 7, 2021

இரகசியமான முறையில் நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது, கைது செய்தாலும் ஒருபோதும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை - முன்னிலை சோசலிசக் கட்சி

(இராஜதுரை ஹஷான்)

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை கொவிட் தாக்கத்துக்கு மத்தியில் இரகசியமான முறையில் நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. தொழிற்சங்கத்தின் தலைவர்களை கைது செய்தாலும் ஒருபோதும் போராட்டத்தை கைவிட போவதில்லை என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டை கண்டித்து கொவிட் தாக்கத்துக்கு மத்தியில் வீதிக்கிறங்கி போராடும் நிலையை அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமையவே போராட்டத்தில் ஈடுபட்டோம். பாதுகாப்பு தரப்பினரே போராட்டத்தை அமைதியற்ற நிலைமையினை தோற்றுவித்தார்கள்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு பொதுமக்கள் மத்தியில் எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே அரசாங்கம் சட்ட மூலத்தின் மீது வாக்கெடுப்பதை பிற்போட்டுள்ளது.

கொவிட் தாக்கம் தற்போது தீவிரமடைந்துள்ளது. அதற்கு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களே காரணம் என் குறிப்பிட்டு. போராட்டங்களை முடக்கி சட்ட மூலத்தை இரசியமான முறையில் நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது.

தொழிற்சங்கத் தலைவர்களையும், உறுப்பினர்களையும் கைது செய்வதால் மாத்திரம் ஒருபோதும் போராட்டத்தை கைவிட மாட்டோம். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

No comments:

Post a Comment