தடுப்பூசியை அவசரமாக பெறவும், அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் ! இலங்கையில் டெல்டா திரிபின் பரவல் உக்கிரம் ! 1.5 வீதமானோர் மரணித்துள்ளனர் - News View

Breaking

Saturday, August 7, 2021

தடுப்பூசியை அவசரமாக பெறவும், அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் ! இலங்கையில் டெல்டா திரிபின் பரவல் உக்கிரம் ! 1.5 வீதமானோர் மரணித்துள்ளனர்

இலங்கையில் தற்போது கொவிட்-19 வைரஸின் டெல்டா திரிபின் பரவல் உக்கிரமடைந்து வருவதால், அதிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் உடனடியாக கொவிட்-19 தடுப்பூசிகளை பெறுமாறும் அநாவசியமாக வெளியே நடமாட வேண்டாமெனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகிலுள்ள பல நாடுகளைப் போலவே இலங்கையிலும் டெல்டா திரிபு வேகமாக பரவி வருகிறது. சகல பிரஜைகளும் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுவரையில் தொற்றுக்கு உள்ளானவர்களில் 1.5 வீதமானோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய நிலையிலுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளது.

முதலாம் கட்ட தடுப்பூசிகளை விரைவில் பெறவும்.

அநாவசியமாக பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளவும்

மிகவும் அத்தியாவசிய தேவைகள் இருப்பின் மாத்திரம் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வெளியில் செல்லவும்

பொது இடத்திற்கு செல்லும் போதும், வெளியில் பயணம் செய்யும் போது எப்போதும் முகக்கவசம் அணியுங்கள்

அறைகள், அரங்குகள், லிஃப்ட் மற்றும் வாகனங்களில் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கவும்

எப்போதும் உங்கள் கைகளை சவர்க்காரமிட்டு கழுவவும்.

2 மீற்றர் சமூக இடைவெளியை பின்பற்றவும்

உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் இருந்தால், வேலையைத் தவிர, வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

No comments:

Post a Comment