இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பில் இந்தியாவின் செயற்பாட்டிற்கு நன்றிகள் : அரசாங்கம் புலம் பெயர்ந்த மக்களுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் - இரா. துரைரெட்ணம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 31, 2021

இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பில் இந்தியாவின் செயற்பாட்டிற்கு நன்றிகள் : அரசாங்கம் புலம் பெயர்ந்த மக்களுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் - இரா. துரைரெட்ணம்

இலங்கையில் யுத்தத்தால் இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் தொடர்பில் இந்தியாவின் செயற்பாட்டிற்கு நான் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமானஇரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் மேலும் கூறியுள்ளதாவது, புலம் பெயர்ந்த மக்களுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் இலங்கை அரசு புலம் பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக இலங்கையில் அவர்களுக்கான நல்ல திட்டங்களை அமுலாக்கி அவர்களை வர வளைக்கின்ற செயற்பாடுகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா இலங்கையில் அதிகளவு பரவுவதற்கு அடிப்படை காரணம் இலங்கை அரசே. இலங்கை அரசை பொறுத்த வரையில் சர்வதேச ரீதியான ஆலோசனைகளை பெற்று அவர்கள் ஊடாகவே சம்பந்தப்பட்ட விடயங்களை செய்து வந்திருந்தால் இன்று கொரோனா அல்லது டெல்டாவை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

அதே நேரத்தில் இந்த கொரோனா தொற்று நோயை இலங்கையில் இல்லாமல் ஆக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற சுகாதாரத் துறையினறையும் பாதுகாக்கக் கூடிய நலன் பற்றிய பல திட்டங்களை வகுக்க வேண்டும்.

இலங்கை தேசிய பொருளாதார கொள்கைகளுக்கு குறிப்பிட்ட ஒரு அளவு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அளிக்கக்கூடிய ஒரு துறை விவசாயத் துறை. இலங்கை அரசாங்கம் மானியமாக வழங்கிய உரத்தினாலேயே அதிக விளைச்சளை பெற முடிந்தது. தேசிய கொள்கைகளை புதிதாக இவர்கள் ஆரம்பிக்கும் வேளையில் இதன் விளைவாக விவசாயிகள் தினந்தோறும் பாதிப்படைவதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது .

இன்று பாருங்கள் இலங்கையைப் பொறுத்த வரையில் நெல்லை பதுக்குகின்றனர், சீனியை பதுக்கின்றனர் மக்கள் சீனி இல்லாமல் பால்மா இல்லாமல் மிகவும் துன்பப்படும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment