கல்முனை பிராந்தியத்தில் கொரோனா அலை : களநிலவரத்தை ஆராய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சாய்ந்தமருதுக்கு விஜயம் - News View

Breaking

Sunday, August 15, 2021

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா அலை : களநிலவரத்தை ஆராய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சாய்ந்தமருதுக்கு விஜயம்

நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஆர்.எம். தௌபீக் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்களின் நன்மை கருதி சாய்ந்தமருது வைத்தியசாலையில் கொறோனா தொற்றாளர்களை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கான விடுதி வசதிகளை ஏற்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது, கொவிட் தொற்றாளர்களுக்கு ஆரம்ப சிகிச்சையளிக்கும் பொருட்டு 60 கட்டில்களைக் கொண்ட விடுதியை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் ஏற்படுத்தப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

இதில் வைத்தியசாலையின் பௌதீக வளங்களை மேம்படுத்துவது மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குறித்து, அபிவிருத்திச் சங்கத்தினால் பல்வேறு விடயங்கள் பணிப்பாளரிடம் முன்வைக்கப்பட்டது. 

இவற்றை கவனத்திற்கொண்ட மாகாண பணிப்பாளர் இதற்கான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்தாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.ஜி.சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர். எம்.சி.எம்.மாஹிர், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர்.ஏ.எல்.எப் ரஹ்மான், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பதில் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர்.எம்.எச்.கே. சனூஸ், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் சங்க ஆலோசகரும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எல்.எம்.சலீம், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஐ.எம் சதாத் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment