சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஒரு சில வழிகாட்டல்களை சட்டமாக்க திட்டம் : வெள்ளிக்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் திட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 14, 2021

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஒரு சில வழிகாட்டல்களை சட்டமாக்க திட்டம் : வெள்ளிக்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் திட்டம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பிறப்பிக்கப்படும் ஒரு சில வழிகாட்டல்களை சட்டமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்து திங்கட்கிழமை அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறு தொற்றுக்குள்ளாகும் பொதுமக்களை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கும் திட்டம் எதிர்வவரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின் பொருட்டு, நாடளாவிய ரீதியில் வைத்தியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment