ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திடீரென வெளியேறுகின்றமை நாட்டின் பாதுகாப்பு நிலைமை மோசமடைய வழிவகுத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
"எங்களின் தற்போதைய நிலைமைக்கு காரணம், அமெரிக்காவின் படைகளை திரும்பப் பெறுவதற்கான முடிவு திடீரென எடுக்கப்பட்டது" என்று கனி பாராளுமன்றில் உரையாற்றும்போது கூறியுள்ளார்.
2020 ஜனவரியில் அனைத்து வெளிநாட்டு படையினரும் நாட்டை விட்டு வெளியேறவும், அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு கூட்டணியுடன் ஒத்துழைப்பை திருத்தவும் ஈராக் சட்டமியற்றுபவர்கள் வாக்களித்தனர்.
கூட்டணி பின்னர் ஈராக்கிய படைகளிடம் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டிருந்த பல இராணுவத் தளங்களை ஒப்படைத்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து சர்வதேச படைகள் வெளியேறத் தொடங்கியதில் இருந்து அங்கு வன்முறை அதிகரித்துள்ளது.
தற்சமயம் தலிபான்கள் ஆப்கானில் பெரிய அளவிலான நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
No comments:
Post a Comment