ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பிரமித்த பண்டார தென்னகோன் எம்.பி நியமனம் - News View

Breaking

Friday, August 27, 2021

ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பிரமித்த பண்டார தென்னகோன் எம்.பி நியமனம்

பாராளுமன்றத்தின் ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26) அலரி மாளிகையில் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு வழங்கினார்.

2021 செப்டம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவின் செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment