கிண்ணியா, உப்பாறு கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் மரணம் - News View

Breaking

Saturday, August 7, 2021

கிண்ணியா, உப்பாறு கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் மரணம்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (07) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா பைசல் நகர் தாமரைவில் பகுதியைச் சேர்ந்த மௌஜுத் பர்ஸான் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நான்கு இளைஞர்கள் கடலில் நீராடுவதற்காக சென்ற போது அதில் ஒருவர் நீந்த முடியாத நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அவர் இறந்த நிலையில் பொதுமக்கள், மற்றும் கடற்படையினரால் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் தற்போது கடற்கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment