உக்காத 'லஞ்ச் சீட்' வகைகளின் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை - News View

About Us

About Us

Breaking

Sunday, August 1, 2021

உக்காத 'லஞ்ச் சீட்' வகைகளின் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை

பொலித்தீனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உக்கிச் செல்லாத 'லஞ்ச் சீட்' இன்று முதல் தடை செய்யப்படுவதுடன் அவற்றின் தயாரிப்பு விற்பனை மற்றும் விநியோகத்திற்கான தடையும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதற்கமைய, இவற்றின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன தடை செய்யப்படுவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள லஞ்ச் சீட்டுக்களை மாத்திரம் விற்பனை செய்து கொள்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் லஞ்ச் சீட் தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறுவோருக்கு எதிராக நடடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

லஞ்ச் சீட் தடை திட்டத்திற்கு நாட்டிலுள்ள பிரதான வர்த்தக வலையமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளன.

No comments:

Post a Comment