வவுனியாவில் 6 மாத குழந்தை கொரோனாவுக்கு பலி - News View

Breaking

Thursday, August 26, 2021

வவுனியாவில் 6 மாத குழந்தை கொரோனாவுக்கு பலி

வவுனியாவில் 6 மாத குழந்தையொன்று கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

இதன்போது குறித்த குழந்தைக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளது.

இதேவேளை வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி நேற்றையதினம் இரவு மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment