அல்ஜீரியாவில் 69 பேரின் உயிர்களை காவு கொண்ட, நாட்டின் வரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீ பரவலின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை முதல் வடக்கு அல்ஜீரியாவில் மலைப்பகுதிகளில் காட்டுத் தீ பரவியது, முக்கியமாக தலைநகர் அல்ஜியர்ஸின் கிழக்கே கபிலி பிராந்தியத்தின் டிஸி ஓசோவிலும் தீ வேகமாக பரவியது.
அதிக வெப்ப நிலையால் சில தீ விபத்துகள் ஏற்பட்டுள்ள போதிலும், பெரும்பலானா தீ விபத்துகளின் பின்னணியில பல நபர்கள் உள்ளதாக அல்ஜீரியா ஜனாதிபதி வியாழக்கிழமை அரசு தொலைக்காட்சியில் ஒரு நேரடி உரையில் கூறினார்.
இது தொடர்பில் டிஸி ஓசோவில் 11 சந்தேக நபர்கள் உட்பட 22 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வனப் பகுதிகளில் உள்ள வீடுகளை எரிக்கும் தீயை அணைக்கும் போராட்டத்தில் குறைந்தது 28 இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment