டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 458 நபர்களுக்கு கொரோனா தொற்று - News View

About Us

About Us

Breaking

Monday, August 9, 2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 458 நபர்களுக்கு கொரோனா தொற்று

2020 டோக்கியோ ஒலிம்பிக்குடன் சம்பந்தப்பட்ட மொத்தம் 458 நபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அமைப்பாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

அவற்றுள் 28 புதிய கொவிட் தொற்றாளர்கள் திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 13 பேர் ஒப்பந்தக்காரர்கள், ஆறு பேர் விளையாட்டுகள் சம்பந்தப்பட்ட பணியாளர்கள், மேலும் ஆறு பேர் தன்னார்வலர்கள் மற்றும் இருவர் டோக்கியோ ஒலிம்பிக் ஊழியர்கள் ஆவர்.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 21 பேர் ஜப்பானில் வசிப்பவர்கள்.

32 ஆவது ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்கியதில் இருந்து, 29 விளையாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 458 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றுள் ஜப்பானில் வசிப்பவர்கள் 307 பேர்.

மொத்தம் 115 விளையாட்டுகளுடன் இணைக்கப்பட்ட அதிகாரிக்கு கொவிட் நேர்மறை பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் 249 தொற்றாளர்கள் ஒப்பந்ததாரர்கள், 12 ஊழியர்கள் மற்றும் 27 தன்னார்வலர்கள், அது தவிர ஊடக சகோதரத்துவத்தைச் சேர்ந்த 26 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஜப்பானுக்கு வெளிநாடுகளிலிருந்து அங்கீகாரம் பெற்ற மொத்தம் 42,711 பணியாளர்கள் வருகை தந்திருந்ததாகவும் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், டோக்கியோ வெற்றிகரமான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது. இது ஞாயிற்றுக்கிழமை பிரகாசமான நிறைவு விழாவுடன் முடிவுபெற்றது.

No comments:

Post a Comment