ஹெய்ட்டியில் பாரிய நில நடுக்கம் : இதுவரை 304 பேர் பலி - 1,800 பேர் காயம் - பலரை காணவில்லை - News View

Breaking

Sunday, August 15, 2021

ஹெய்ட்டியில் பாரிய நில நடுக்கம் : இதுவரை 304 பேர் பலி - 1,800 பேர் காயம் - பலரை காணவில்லை

ஹெய்ட்டியில் ஏற்பட்ட 7.2 மெக்னிடியூட் நிலநடுக்கத்தினால் இதுவரை 304 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றைய தினம் (14) ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கத்தில் சிக்கி 1,800 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடுகள், அரச தனியார் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதோடு, பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வனர்த்தத்தை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி, ஒரு மாத அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஹெய்ட்டி கடந்த 2010 இல் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்திலிருந்து இன்னும் மீண்டு கொண்டிருக்கும் நிலையில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment