இராஜதுரை ஹஷான்
உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக குறைவடைந்துள்ள காரணத்தினால் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை குறைக்க எரிபொருளின் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும். 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை எரிபொருளின் விலையை குறைந்தளவில் பேணுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது என சுட்டிக்காட்டி நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த மாதம் 11 ஆம் திகதி தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போது உலக சந்தையில் எரிபொருள் தாங்கியின் விலை சுமார் 70.91 டொலராக காணப்பட்டதுடன், கடந்த மாதம் 30 ஆம் திகதி எரிபொருள் தாங்கியின் விலை 73.95 டொலராக காணப்பட்டது.
இதன் பின்னர் உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக குறைவடைந்தது. இதற்கமைய ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்உலக சந்தையில் எரிபொருள் ஒரு தாங்கியின் விலை 62.14 அமெரிக்க டொலராக காணப்பட்டது.
தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை திருத்தப்பட்டதை தொடர்ந்து, உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்த வரையிலான காலப்பகுதியில் எரிபொருளின் விலை 8.77 அமெரிக்க டொலரினால் குறைவடைந்துள்ளது. இதனால் 12 சதவீத இலாபம் கிடைக்கப் பெற்றுள்ளனஎனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment