கொழும்பு, லேடி றிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொவிட்-19 தொற்றுக்குள்ளான சுமார் 200 சிறுவர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

கொழும்பு, லேடி றிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொவிட்-19 தொற்றுக்குள்ளான சுமார் 200 சிறுவர்கள்

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 200 சிறுவர்கள் தற்போது கொழும்பு, லேடி றிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்களில் நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்ததால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நேற்று (26) மற்றொரு விடுதியும் ஒதுக்கப்பட்டது.

அதுபோல, வைத்தியசாலையின் எட்டாம் இலக்க விடுதியும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக இதுவரை ஆறு விடுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று டாக்டர் விஜேசூரிய கூறினார்.

No comments:

Post a Comment