பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 838 தொற்றாளர்கள் : 14 கொரோனா மரணங்கள் - News View

Breaking

Friday, August 27, 2021

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 838 தொற்றாளர்கள் : 14 கொரோனா மரணங்கள்

பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாணத்தில் 27.8.2021 இன்றுடன் 838 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 14 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஊவா மாகாண சுகாதர சேவைகள் பணியகத்தினால் வெளியிடப்பட்ட கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் குறித்த விபரப்பட்டியலில் மேற்கண்ட விபரம் குறிப்பிடப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 495 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 343 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அறுவர் உயிரிழந்துள்ளனர்.

பதுளை 83 பேர், பண்டாரவளை 35 பேர், எல்ல 37 பேர், கிரார்துருகோட்டை 07 பேர், ஹல்துமுள்ளை 51 பேர், ஹாலிஎல 07பேர், ஹப்புத்தளை 56 பேர், கந்தகெட்டிய 06 பேர், லுணுகலை 09 பேர், மகியங்கனை 13 பேர், மிகாகிவுல 03 பேர், பசறை 22 பேர், ரிதிமாளியத்த 94 பேர், சொரணதொட்டை 09 பேர், ஊவா - பரனகம 43 பேர், வெலிமட 20 பேர் என்ற வகையில் 495 பேர் கொரேனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் பதுளை, எல்ல, கிராந்துருகோட்டை, ஹல்துமுள்ளை, ஹாலிஎல, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் ஆறு பேரும், வெலிமடையில் இருவருமாக எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை 66 பேர், சியாம்பலாண்டுவை 41பேர், மடுல்ல 12 பேர், மெத்கம 42 பேர், பிபில 17 பேர், படல்கும்பரை 21 பேர், புத்தலை 42 பேர், வெள்ளவாய 64 பேர், தனமல்வில 05 பேர், செவனகல 15 பேர், கதிர்காமம் 18 பேர், என்ற வகையில் 343 பேர் கோவிட்-19 தொற்றாளர்களாகவுள்ளனர்.

இவர்களில் பிபிலையில் ஒருவரும், படல்கும்பரையில் இருவரும், வெள்ளவாயாவில் மூவருமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹப்புத்தளையில் அடையானம் காணப்பட்ட கோவிட்19 தொற்றாளர்கள் 56 பேரில் 16 வயதுகளுக்குற்பட்ட 11 சிறார்களும் உள்ளடங்கியுள்ளதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment