கொரோனா தொற்றுக்குள்ளாகி 150 இலங்கை பணியாளர்கள் உயிரிழப்பு - News View

Breaking

Sunday, August 8, 2021

கொரோனா தொற்றுக்குள்ளாகி 150 இலங்கை பணியாளர்கள் உயிரிழப்பு

வௌிநாட்டு வேலை வாய்ப்பிற்காக வௌிநாடுகளுக்கு சென்ற இலங்கை பணியாளர்களில் கிட்டத்தட்ட 150 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து 17 நாடுகளுக்கு சென்ற பணியாளர்களில் பலர் தொற்றுக்குள்ளான போதிலும், பெரும்பாலானோர் குணமடைந்துள்ளதாக மங்கள ரன்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இலங்கை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் சவூதி அரேபிய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment