கண்டி மக்களுக்காக 15,000 Sputnik V டோஸ்கள் வந்தடைந்தன - News View

Breaking

Tuesday, August 31, 2021

கண்டி மக்களுக்காக 15,000 Sputnik V டோஸ்கள் வந்தடைந்தன

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய, இன்று (31) காலை ரஷ்ய தயாரிப்பு கொவிட்-19 Sputnik V தடுப்பூசியின் 15,000 டோஸ்கள் இலங்கையை வந்தடைந்திருந்தன.

178 கி.கி. எடை கொண்ட இந்த தடுப்பூசிகள், ரஷ்யாவின் மஸ்கட் நகரிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஏற்கனவே Sputnik V தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக இத்தொகுதி பயன்படுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment