109 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பருத்தித்துறையைச் சேர்ந்த இரண்டு பேர் கைது - மதிப்பு ரூபா 32 மில்லியனுக்கும் அதிகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 1, 2021

109 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பருத்தித்துறையைச் சேர்ந்த இரண்டு பேர் கைது - மதிப்பு ரூபா 32 மில்லியனுக்கும் அதிகம்

ரூ. 32 மில்லியனுக்கும் (ரூ. 3.2 கோடிக்கும்) அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் வட கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினால் யாழ்ப்பாணம், தொண்டைமானாறு பிரதேசத்திலிருந்து மாமுனை வரையான கடற்கரை பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், 109 கிலோ மற்றும் 150 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்படட்டுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட P 177 கடலோர பாதுகாப்பு கப்பல் மூலம் யாழ்ப்பாணத்தின் கடற்கரையில் உள்ள தொண்டைமானாறு முதல் மாமுனை கடற்கரையில் நேற்றையதினம் (31) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த இரண்டு சந்தேகநபர்கள், 2 பொதிகளில் அடைக்கப்பட்ட கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் P015 கடலோர பாதுகாப்பு ரோந்துப் படையினர் நடாத்திய மேலதிக தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அப்பகுதியில் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட மற்றுமொரு கேரளா கஞ்சா தொகுதி மீட்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மொத்தமாக 109 கிலோகிராம் மற்றும் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நடவடிக்கையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ. 32 மில்லியனுக்கும் அதிகமென நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 26 மற்றும் 28 வயதுடைய பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களையும் கைப்பற்றிய பொருட்களையம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment