32 ஆவது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய ஒலிம்பிக் சாதனையைப் படைத்து தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார் ஜமைக்கா நாட்டின் தொம்சன் ஹெரா எலைன்.
இவர் பந்தயத் தூரத்தை 10.61 செக்கன்களில் ஓடி முடித்தார். இதற்கு முன்னர் அமெரிக்க வீராங்கனை ஜொன்னர் ப்ளொனெ்ஸ் 1988 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் 10.62 செக்கன்களில் ஓடி முடித்ததே சாதனையாக இருந்தது. அதனை நேற்று ஜமைக்கா வீராங்கனை முறியடித்துள்ளார்.
அத்தோடு இதில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் ஜமைக்காவே தட்டிச் சென்றமை விசேட அம்சமாகும்.
(டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)
No comments:
Post a Comment