ஒலிம்பிக்கில் 100 மீற்றர் தகுதிச் சுற்றில் இலங்கை வீரர் யுபுன் தோல்வி - News View

About Us

About Us

Breaking

Sunday, August 1, 2021

ஒலிம்பிக்கில் 100 மீற்றர் தகுதிச் சுற்றில் இலங்கை வீரர் யுபுன் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிகாண் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் யுபுன் அபேகோர்ன் 10.32 செக்கன்களில் பந்தயத்தை நிறைவு செய்தார்.

அது மாத்திரமன்றி போட்டியிட்ட ஒன்பது வீரர்களில் ஆறாவது இடத்தைப் பிடித்ததுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தார்.

100 மீற்றர் தனது தனிப்பட்ட ஓட்ட வேகமான 10.15 செக்கன் என்ற நேர அளவைக்கூட எட்டாத நிலையிலேயே தெற்காசியாவின் அதிவேக வீரராகக் கருதப்படும் யுபுன் தோற்றுள்ளார்.

மூன்றாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஜேகோப்ஸ் 9.94 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடம் பெற்றார்.

இரணடாமிடத்தை ஜமைக்காவின் செவிலி (10.04) பெற்றதோடு, மூன்றாமிடத்தை தென்னாபிரிக்காவின் ஷாவுன் (10.12) பிடித்தார்.

தகுதுச் சுற்றுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவர்.

(டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

No comments:

Post a Comment