ஆட்சியை கவிழ்க்கலாம் என எவரும் கனவு காண வேண்டாம் : SLPP அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்கிறார் பசில் - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

ஆட்சியை கவிழ்க்கலாம் என எவரும் கனவு காண வேண்டாம் : SLPP அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்கிறார் பசில்

ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசை கவிழ்க்க கனவு காண வேண்டாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, எதிரணிக்கு தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் அமைச்சராக பதவி ஏற்றவுடனேயே இந்த ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட ஒரு சிலரைக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசை கவிழ்க்க முடியாது.

கட்சியை மனதில் வைத்தே நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தெரிவு செய்துள்ளார்கள்.

எனவே அர்த்தமற்ற இந்த ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பசில் ராஜபக்‌ஷ எதிரணியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad